
மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்காது ராஜபக்ஷக்களை காப்பாற்றும் முகமாக சர்வகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கண்டித்தும், பிரதமரும் பதவி விலகவேண்டும் எனும் கோஷத்துடன் பிரதமர் இல்லமான அலரிமாளிகைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் உட்புகுந்துள்ள நிலையில் பிரதமல் இல்லமும் மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு தான் தலைவணங்குவதாக பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எது எவ்வாறாகினும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் வரை அங்கிருந்து விலகப்போவதில்லை எனவும் போராடம் மேலும் தீவிரமடையும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
