நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரகாலம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.