ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேயவர்த்தன தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க தான் பதவியை துறக்க முன்வந்துள்ளதாகவும், அமைதியாக ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதால் வரும் 13ம் திகதி புதன்கிழமை அன்று தான் தனது பதவி விலகலை அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.