Home செய்திகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி யாழிலும் மக்கள் போராட்டம்:

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி யாழிலும் மக்கள் போராட்டம்:

66
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (9) யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு, யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.