Home செய்திகள் இன்றைய போராட்டத்தின் போது 31 பேர் காயம்:

இன்றைய போராட்டத்தின் போது 31 பேர் காயம்:

69
0

தன்னெழுச்சியாக மக்கள் திரண்டெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக நடாத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய மாபெரும் போராட்டத்தை தடுக்க பொலீஸ், சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் உள்ளடங்கலாக சுமார் பத்தாயிரம் படையினரை அரசாங்கம் பாதுகாப்பிற்காக நிறுத்திய போதும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து மக்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி முன்சென்றபோது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களிலும், அங்கு நிலவிய அமைதியின்மையால் நெரிசல்களுக்குள் சிக்குண்டுமே பலர் காயமுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.