நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக இலங்கை அரசாங்கத்தால் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான “பாண்” தயாரிப்பும் முழுமையாக தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக போதிய எரிபொருள் மற்றும் கோதுமை என்பன கிடைக்காமையினால் இதுவரை 3500 வெதுப்பகங்கள் (பேக்கரி) மூடப்பட்டுள்ளதாகவும், இதற்கு துரித தீர்வு காணப்படாமல் இதே நிலை நீடித்தால் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும் “இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்” தெரிவித்துள்ளது.