
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி சற்று முன் மரணமடைந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே ஷின்சோ அபே மீது பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திய இளைஞனை ஜப்பானிய பொலிஸார் உடனடியாகவே கைது செய்துள்ள போதும், குறித்த சம்பவத்தால் ஜப்பானில் பதற்ற நிலமை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.