இலங்கை மக்களினதும், சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வழி விட்டு ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை விடுத்துள்ள அறிக்கையில்,
மக்கள் தனிநபர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் மாத்திரமே அவரது பதவிக்காலம் நியாயத்தன்மை கொண்டதாக கருதப்படும் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மதத்தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட சாதாரண மக்கள் என அனைவரும் வீதியில் இறங்கி போராடிவருவதானது அவர்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆணை இல்லாது போய்விட்டது என்பதையே காட்டுகிறது.
ஆகவே நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
