Home சினிமா “சீயான் விக்ரம்” வைத்தியசாலையில் அனுமதி!

“சீயான் விக்ரம்” வைத்தியசாலையில் அனுமதி!

136
0

பிரபல தென்னிந்திய நடிகரான “சீயான் விக்ரம்” உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள காவெரி மருத்துவமனையில் “சீயான் விக்ரம்” அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.

விக்ரமிற்கு என்ன சுகஜீனம் என்பதை இதுவரை அவரது குடும்பத்தினரோ அன்றி வைத்தியர்களோ வெளியிடாத போதும் சிகிச்சையின் பின் தற்போது “விக்ரம்” நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம் நடித்த “பொன்னியின் செல்வன்” படம் செப்ரெம்பர் மாத இறுதியில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.