Home உலக செய்திகள் ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் டி.ராஜேந்தரை சந்தித்தார் வி.உருத்திரகுமாரன்:

ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் டி.ராஜேந்தரை சந்தித்தார் வி.உருத்திரகுமாரன்:

75
0

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு தனது தோழமையினையும் உறுதுணையினையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, பல போராட்டங்களையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்துவரும் திரு.டி.ராஜேந்தர் அவர்களுக்கு மதிப்பழிக்கும் வகையிலும், அவரது உறுதுணைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இச் சந்திப்பு இடம்பெற்றதோடு, அவர் பூரண குணமடைந்து நிறைந்த ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் ஊர் திரும்புவதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.