இவ் ஆண்டில் மட்டும் 1486 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மருத்துவப் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய இவ் ஆண்டு ஜனவரி மாதத்தில் 138 வைத்தியர்களும், பெப்ரவரி மாதத்தில் 172 வைத்தியர்களும், மார்ச் மாதத்தில் 198 வைத்தியர்களும், ஏப்ரல் மாதத்தில் 214 வைத்தியர்களும், மே மாதத்தில் 315 வைத்தியர்களும், ஜூன் மாத்ததில் 449 வைத்தியர்களும் என மொத்தம் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்லனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை வைத்திய பேரவையிடம் இருந்து தமது நற்சான்றிதழ் பத்திரத்தை பெற்றே சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நாட்டு நிலைமை மற்றும் எரிபொருள், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் மீண்டும் இலங்கை திரும்பிவந்து சேவை ஆற்றுவார்களா என்பது சந்தேகமே.