Home சினிமா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்:

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்:

114
0

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர், இஅசையமைப்பாளர், நடிகர், கதாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட டி.ராஜேந்தர் அவர்களுக்கு வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் பலனாக அவர் இப்போது நலமாக உள்ளதாகவும், வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய மேலும் ஒரு மாத காலம் அமெரிக்காவிலேயே ஓய்வு எடுத்து விட்டு பின்னர் சென்னை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை சென்னையில் இருந்து கூட்டிச் சென்று அருகிருந்து தேவையான எல்லாவற்றையு செய்து கொண்ட அவரது மகன் “லிட்டில் சூப்பஸ்டார்” சிம்பு அவர்கள் தற்போது தனது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார்.

சிம்பு நடித்து வரும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் செப்ரெம்பர் 15ல் வெளிவர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் அவர்கள் சென்னை திரும்புவார் என நம்பப்படுகிறது.