அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (8) கொழும்பில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலீஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது களனி பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகி கொழும்பு மத்திய வங்கிக்கு அருகாமையில் சென்ற வேளையே குறித்த தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இப் போராட்டத்தை தடுக்க பொலிஸாரால் நீதிமன்றில் முன் அனுமதி கோரிய போதும் அதற்கு நீதிமன்றம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
