Home செய்திகள் நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணெயுடன் நேற்று ஒருவர் கைது:

நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணெயுடன் நேற்று ஒருவர் கைது:

58
0

கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணெயுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த 3600 லீட்டர் மண்ணெண்ணையையும் மீட்டதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மண்ணெண்ணெய் வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மண்ணெண்ணெ இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.