Home செய்திகள் பூநகரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சளும் ஒரு தொகை கிருமிநாசினியும் மீட்பு:

பூநகரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சளும் ஒரு தொகை கிருமிநாசினியும் மீட்பு:

69
0

கிளிநொச்சி- கௌதாரிமுனை, வெட்டக்காடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சளும் ஒரு தொகை கிருமிநாசினியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் குறித்த பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினரால் அவை மீட்கப்பட்டு பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுற்றிவளைப்பில் 65 பெரிய உரைப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராம் மஞ்சளும், 03 பைகளில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ் மஞ்சள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதனுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.