அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினம் நேற்று (04) கொண்டாடப்பட்ட வேளையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள “ஹைலண்ட் பூங்காவில்” இதுந்து ஆரம்பமான சுதந்திரதின அணிவகுப்பின் போது நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்ததோடு மேலும், 36 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள வேளை அப்பகுதியில் இருந்து அதி நவீன துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.