யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றத்தின் கீழ் 12 இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) மாலை கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களையும், அவர்களின் படகையும் மயிலிட்டி துறைமுகப்படுதிக்கொ கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை குறித்த மீனவர்களை இன்று (04) காலை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.