Home உலக செய்திகள் டென்மார்க் – Copenhagen பிரதேசத்தில் Field’s shopping centre இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்...

டென்மார்க் – Copenhagen பிரதேசத்தில் Field’s shopping centre இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

67
0

டென்மார்க் நாட்டின் Copenhagen பிரதேசத்தில் அமைந்துள்ள Field’s shopping centre இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதோது மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03) இடம்பெற்ர குறித்த சம்பவத்தால் Field’s shopping centre இல் இருந்த மக்கள் பதற்றம் அடைந்த சிதறி ஓடினர். அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மேலும் உயிரிழப்புக்கள் நடக்காத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த்தியதோடு குறித்த Field’s shopping centre கட்டிடத்தொகுதியையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞன் ஒருவரை பயங்கரவாத குற்றச் செயல்களின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அந் நாட்டுக் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Field’s shopping centre ஸ்கண்டினேவியா நாடுகளிலேயே மிகப்பெரும் “Shopping Mall” என தெரிவிக்கப்படுகிரது.