மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் ஐந்து பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆறு பேருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
2000ஆம் ஆண்டு தெவிநுவர பகுதியில் ஐந்து பேரை கொலை செய்த குற்றவாளிகள் ஆறு பேருக்கே 22 ஆண்டுகளின் பின் மாத்தறை மேல் நீதிமன்றம் நேற்று (03) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2000 இல் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 15 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.