Home செய்திகள் இலங்கையில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை இவ் ஆண்டில் 85% வீழ்ச்சி!

இலங்கையில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை இவ் ஆண்டில் 85% வீழ்ச்சி!

69
0

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கை 85 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் சங்கச் செயலாளர் சுசந்த ஹேமசிறீ ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஒவ்வோர் ஆண்டும் இக் காலப்பகுதியில் வழமையாக அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமணத்திற்காக மண்டபங்களை முற்பதிவு செய்வது கூட கடினமாக இருக்கும். ஆனால் இவ் ஆண்டு எப்போதும் இல்லாத வாறு திருமணங்கள் அதிகளவாக குறைந்துள்ளது. இதற்கு தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியும், அதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுமே காரணமாக உள்ளது. என்றார்.