Home உலக செய்திகள் இங்கிலாந்தில் 17 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து:

இங்கிலாந்தில் 17 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து:

69
0

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் 17 மாடிக் குடியிருப்பில் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு படை வீரர்களின் துரித செயற்பாட்டால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

புறொம்பிளி பிரதேசத்தின் St Mark’s Square பகுதியில் அமைந்திருந்த 17 மாடிக் குடியிருப்பின் 15வது மாடியிலேயே நேற்றைய (03) தினம் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றி பின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் குறித்த குடியிருப்பு தொகுதியின் சில வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.