லிபியாவில் – அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தின் உச்சமாக அந் நாட்டு பாராளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தீ வைத்துள்ளனர்.
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மரணத்தின் பின் அந் நாட்டில் அரசியல் குழப்பங்களும், அரசாங்கத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களும் இடம்பெற்று வருகிந்றமை குறிப்பிடத்தக்கது.