Home செய்திகள் மலையகத்தில் கடும் மழை – நீரில் மூழ்கிய வீடுகள்:

மலையகத்தில் கடும் மழை – நீரில் மூழ்கிய வீடுகள்:

86
0

மலையகத்தில் இன்று (03) அதிகாலை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுகளும், விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், மண்சரிவும் ஏற்பட்டுள்ள நிலையில், வட்டவள் – ரொசல்ல பகுதியில் இதுவரையில் 21 குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

இந் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட அப்பகுதி கிராமசேவகர் அங்குள்ள நிலைமை தொடர்பில், மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.