Home உலக செய்திகள் பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவர் நியமனம்:

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவர் நியமனம்:

63
0

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1992இல் அரசு பணியில் இணைந்த விக்ரம், சரளமாக சீன மொழி பேசக்கூடியவர் ஆவார். கடின உழைப்பாளி என அழைக்கப்படும் விக்ரம், இதற்கு முன் பங்களாதேஷுக்கான இந்திய தூதராக பொறுப்பு வகித்துவந்தார்.

தென் கொரியாவுக்கான தூதராக இருந்தபோது, KIA motors நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்காக இந்திய தூதராகப் பணியாற்றிய விக்ரம், பிரதமரின் தனிச்செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.