Home உலக செய்திகள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக சென்ற வயோதிப தமிழ் பெண் 7 நாட்களின் பின் மரணம்!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக சென்ற வயோதிப தமிழ் பெண் 7 நாட்களின் பின் மரணம்!

21
0

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று (3) உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் 27ஆம் திகதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்கப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களில் (82 வயது வயோதிபர், 70 வயது வயோதிப பெண்மணி) ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயதான பெண்ணின் நெற்றியில் காயம் இருந்ததால் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் முதியவர் கண் திறந்த நிலையில் மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மருத்துவமனையில் மயக்கு நிலையிலேயே இருந்தார். இதனால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று காலை பரமேஸ்வரி மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.