Home செய்திகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

71
0

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடமையிலிருந்து விலகியதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்கவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இதேவேளை வேலைநிறுத்தம் காரணமாக, மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டு அஞ்சல் பிரிவு ஆகியவற்றில் கணிசமான அளவு அனுப்பப்படாத அஞ்சல்கள் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரமே திறக்கப்படும் என தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.எனினும், இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.