Home செய்திகள் மேலும் 4 இலங்கை அகதிகள் தமிழகத்தில் தஞ்சம்!

மேலும் 4 இலங்கை அகதிகள் தமிழகத்தில் தஞ்சம்!

76
0

இலங்கையிலிருந்து மேலும் நால்வர் நேற்று அகதிகளாக கண்ணாடி இழை படகில் புறப்பட்டு தமிழகம் தனுஸ்கோடி கரையை சென்றடைந்துள்ளனர்.

வவுனிய மாவட்டத்தை சேர்ந்த டொமினிக் (42), மனைவி சுதர்சனி(24) ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50) உள்ளிட்ட 04 பேரே நேற்றுக் அதிகாலை சுமார் 05 மணியளவில் தனுஸ்கோடிக்கருகேயுள்ள நான்காம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.

மணல் திட்டில் சுமார் 04 மணிநேரமாக சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் அப்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் கரையோர பொலிஸார் படகில் சென்று இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் கரையோர பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய பின் நால்வரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.

விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரியவர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு இலட்சமென இலங்கை ரூபாவில் 03 இலட்சம் ரூபாய் கொடுத்து கண்ணாடி இழை படகில் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்க்கள் தெரியவந்துள்ளனர்.