பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
“பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
“ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னெடுக்கப்பட உள்ள இத்திட்டத்தின் கீழ். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக ரூ.7,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர்களையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது, குறித்த தொகை இந்த நிவாரண திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.