நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் எரிபொருள் இல்லாமல் ஆறு பேர் பயணிக்கக்கூடிய புதிய போக்குவரத்து ரிக்ஷா வண்டியொன்று சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மது நிஸார் என்பவரே இவ்வாறு எரிபொருள் இல்லாமல் ஆட்களை சுமந்து செல்லும் வகையிலான புதிய ரிக்சா துவிச்சக்கர வண்டியொன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் பெட்ரோல் இல்லாத இக்கால பகுதியில் முச்சக்கரவண்டி இல்லாமல் கஷ்டப்படும் நிலையை கருத்திற்கொண்டே இதனை உருவாக்கியதாக முஹம்மட் நிஸார் தெரிவிக்கின்றார்.
இவ்வாறாக எரிபொருள் பிரச்சினைக்கு மாற்றீடாக இலங்கையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
