Home ஆன்மீகம் வரலாற்று சிறப்புமிக்க “திருக்கேதீஸ்வரம்” ஆலய கும்பாபிஷேகம் புதன் (04/07/2022) அன்று!

வரலாற்று சிறப்புமிக்க “திருக்கேதீஸ்வரம்” ஆலய கும்பாபிஷேகம் புதன் (04/07/2022) அன்று!

120
0

310 மில்லியன் செலவில் மீள் வடிவமைக்கப்பட்ட “திருக்கேதீஸ்வரம்” ஆலயத்தின் கும்பாபிஷேகம்எ திர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00மணிமுதல் 10.30மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது.

முழுக்க முழுக்க கற்கோயிலாகவும், கலைப்பொக்கிஷமாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்திற்கான கற்தூண்கள் வரலாற்றையும், சிற்பக்கலையின் சிறப்பையும் உணர்த்தும் வண்ணம் இந்தியாவிலே வடிவமைத்து பொலியப்பட்டு, அவை கப்பலில் ஏற்றிக் கொண்டு இங்கு கொண்டு வந்து ஆலயத்தில் அமைத்துள்ளார்கள். 

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்க மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவாவடுதுரை ஆதீனம், நல்லை ஆதீனம் உட்பட பல ஆதீனங்களின் இளைய பட்டங்கள் வருகை தரவுள்ளனர்.

உலகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் கௌரியம்பாள் சமேத திருக்கேதீச்சரநாதர் ஆலயம் தலைசிறந்ததாகும். இவ்வாலயம் பாடல் பெற்ற புராதன தலமாகவும் திகழ்கிறது.

திருஞானசம்பந்தர், சுந்தரர் உட்பட சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இவ்வாலயச் சிறப்பினை பாடலாக பாடியிருப்பதை அறிகின்றோம்.  

சோழ, பாண்டிய மன்னர்கள் உட்பட இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியன் வரை இவ்வாலயத்திற்கு  திருப்பணிகள் செய்துள்ளார்கள். கி.பி.1505இல் காலியில் வந்திறங்கிய போர்த்துக்கேயர் பின்னர், பெரும் வணிகத்துறையாகவும், பட்டினமாகவும் விளங்கிய மாதோட்டத்திற்கும் வந்து பிரம்மாண்டமான திருக்கோயிலாக விளங்கிய திருக்கேதீச்சர சிவாலயத்தைப் பார்த்து அதிசயித்து வியந்தது மட்டுமல்ல, அவ்வாலயத்திலிருந்த விக்கிரகங்கள், இரத்தினங்கள், பொன், பவளங்கள், பொருள் ஆபரணங்களையெல்லாம் கொள்ளையடித்ததுடன், ஆலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.