இத்தாலியில் கொவிட் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களின் வீதமும் அதிகரித்து வருகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை இத்தாலியில் 83,555 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாளொன்றில் பதிவான அதிக தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.
இதற்கிடையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் சதவீதம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முதல் முறையாக சடுதியாக அதிகரித்துள்ளது.
இதேவேளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 69 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை இறப்பு எண்ணிக்கை 63 ஆக பதிவாகியிருந்தது