Home உலக செய்திகள் திருகோணமலையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்ற வயோதிப தம்பதிகள்:

திருகோணமலையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்ற வயோதிப தம்பதிகள்:

102
0

இலங்கை – திருகோணமலையில் இருந்து படகு மூலம் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கிய வயதான தம்பதியர் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து இருந்த நிலையில் அங்கு வந்த கடலோர பொலிஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ் ஆண்டில் மட்டும் இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகதிற்கு தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.