தமிழ்நாட்டில் காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) பாண்டிச்சேரிக்கும் இடையே சரக்கு கப்பல் சேவையை தொடங்குவதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய ஜூலை 01 ஆம் திகதி முதல் படகுச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
படகுச் சேவை மூலம் தேவையான எரிபொருள், மண்ணெண்ணெய், டீசல் மற்றும் உரம், பாமாயில் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
காங்கேசன்துறைக்கும் தமிழகத்திலுள்ள துறைமுகங்களான காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே இக் கப்பல் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.