Home தமிழகச் செய்திகள் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன்

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன்

23
0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தொண்டர்களைச் சந்திக்க சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலா அங்கு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:

அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரிசெய்யப்படும். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும். வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.