Home தமிழகச் செய்திகள் திருச்சி – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளிப்பு!

திருச்சி – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளிப்பு!

101
0

திருச்சி மத்திய சிறை – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளித்த நிலையில், திருச்சி அரச வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இலங்கை தமிழர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 150 அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.