Home செய்திகள் காங்கேசன்துறையில் 78 வயது பெண்மணி வெட்டிக் கொலை!

காங்கேசன்துறையில் 78 வயது பெண்மணி வெட்டிக் கொலை!

82
0

காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண்மணி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட்டவராவார்.

மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை விரைவில் கைது செய் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.