21 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன, மத, மொழி சமனான பலனை அனுபவிக்க முடியுமெனவும், அதன் பின்னர் நாட்டுக்கு தேவையான புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் அழைப்பில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நீதி அமைச்சர் யாழ்ப்பாண தொடரூந்து நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், நட்டஈடு வழங்கல் மற்றும் நல்லிணக்க அலுவலகங்களூடாக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ,இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் சில தினங்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.