கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு சென்று குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு கடற்பரப்பில் பாணந்துறையை அண்மித்த கடற்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு 25 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 4 பெண்கள் இவ்வாறாக கடற்படையினரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருகோணமலை, மன்னார். நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.