Home செய்திகள் பிணையில் விடுதலையாகி இருந்த 23 வயது இளைஞன் மர்மமான முறையில் வீட்டில் மரணம்!

பிணையில் விடுதலையாகி இருந்த 23 வயது இளைஞன் மர்மமான முறையில் வீட்டில் மரணம்!

59
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள  காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய  பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் 40 தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில்  இருந்து பிணையில் விடுதலையாகி இருந்தார் எனவும் தெரிய வருகிறது.

காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து  குறித்த வீட்டுக்கு சென்ற  நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாறு  நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.