Home உலக செய்திகள் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 920 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 920 பேர் உயிரிழப்பு!

7
0

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 600 க்கும் மெற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.