Home உலக செய்திகள் 600 விமான சேவைகளை ரத்து செய்த்த easyJet நிறுவனம்:

600 விமான சேவைகளை ரத்து செய்த்த easyJet நிறுவனம்:

93
0

easyJet விமான சேவை நிறுவனம் சுமார் 10,000 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 600 விமானங்களை easyJet நிறுவனம் ரத்து செய்துள்ளது.

சுற்றுலா தலங்களான கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கான விமானங்களும் இதில் அடங்கும் எனவும், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் விமானங்கள் ரத்து செய்யப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, லண்டனின் கேட்விக் விமான நிலையம் தினசரி விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால், 4,000 வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதி முடிவெடுக்கப்படவில்லை என easyJet நிர்வாகம் தெரிவித்திருந்தாலும், இதனால் கோடை விடுமுறைக்கு திட்டமிட்டுவரும் 1.5 மில்லியன் easyJet வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

EasyJet நிர்வாகம் ஜூலை மற்றும் செப்டம்பர் இடையே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 16,000 பயணங்களில் 7 சதவீதத்தை ஏற்கனவே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.