Home செய்திகள் வவுனியா – எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு, ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா – எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு, ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

112
0

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலின் பின்னர் ஒருவர் வரிசையில் நின்றிருந்த குழுவினரை வாளை எடுத்து வெட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த ஐவரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.