இந்தியாவில் நடைபெற்ற மிக்ஸ் பொக்சிங் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற செல்வி ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு நேற்று மாலை மாங்குளத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தைச் சேர்ந்த “விஜிதா” போட்டியில் வெற்றியீட்டி நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்த நிலையிலேயே மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட “விஜிதா” பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.