Home உலக செய்திகள் பிரித்தானியாவில் அதிகரிக்கும் “குரங்கம்மை” தொற்று!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் “குரங்கம்மை” தொற்று!

94
0

பிரித்தானியாவில் மெய்ட்ஸ்ரோன், புறொம்பிளி மற்றும் லெய்ஸ்டர் ஆகிய பகுதிகளில் பலருக்கு புதிதாக குரங்கம்மை நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 574 எனவும், புதுப்பிக்கப்பட்ட எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியாகும் என பிரித்தானிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை வெளியானதைவிடவும் அதிகமிருக்கலாம் எனவும், தொற்றாளர்கள் தகவல் அளிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, எவருக்கு வேண்டுமானாலும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்படலாம் எனவும், உடல் ரீதியான நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை தொற்றாளர்களில் 81% பேர்கள் லண்டன்வாசிகள் எனவும், அதில் 99% பேர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும், தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் அல்லது ஆண்களுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.