Home தாயக செய்திகள் முல்லையில் – புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மண்ணெண்ணெய பெரல்கள்.

முல்லையில் – புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மண்ணெண்ணெய பெரல்கள்.

114
0

முல்லைத்தீவு – உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மண்ணெண்ணெய பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள், படைஅதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டன. அவை மண்ணெண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அந்த்த பெரல்களில் இருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நாளை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.