Home முக்கிய செய்திகள் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து முற்றுகை போராட்டம்:

ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து முற்றுகை போராட்டம்:

96
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அதனை கறுப்புத் தினமாக அறிவித்து ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.