Home செய்திகள் இத்தனை பிரச்சனைகளின் பின்னரும் கோட்டபாய அரசு திருந்தவில்லை: சித்தார்த்தன்

இத்தனை பிரச்சனைகளின் பின்னரும் கோட்டபாய அரசு திருந்தவில்லை: சித்தார்த்தன்

91
0

கொரோனா தாக்கம் மற்றும் ரஷ்ய உக்ரேன் யுத்தம் என்பவற்றால் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுக்க இந்த பொருளாதார நெருக்கடி இருக்கிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் இவை எல்லாவற்றையும் தாண்டிய நெருக்கடியொன்றை நாங்கள் முகம் கொடுக்கிறோம் என்றால் கோட்டபாய அரசின் தவறுதலான நடைமுறைகளே காரணம். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பொருளாதாரத்தைக் கொண்டுவர முடியாது என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பொருளாதாரப் பிரச்சினை நிவர்த்தியடைவதற்கு நாம் அல்ல பிரதமர் அவர்களே சொல்லுகின்றார். மிக நீண்டகாலம் எடுக்கப்போகிறது. மிக அண்மையில் இன்னும் பெரிய நெருக்கடி வரப்போகிறது. பெற்றோல் மாத்திரமல்ல உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது அதை அவர் சொல்லத் தேவையில்லை. நாங்கள் எல்லோரும் நேரடியாகவே பார்க்கின்றோம். இது நிவர்த்தியாவதற்கு மிக நீண்டகாலம் எடுக்கப்போகின்றது.

நாம் அனைவரும் பஞ்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம். பொது மக்களைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் இந்தப் பஞ்சத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய கட்சி ஊடாக, அங்கத்தவர்கள் ஊடாக உதவ முடியுமா என்று பார்க்கின்றோம்.

வீட்டுத் தோட்டங்கள், சிறு தோட்டங்கள், செய்வதற்கு புலம்பெயர் தோழர்கள் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பெரியளவில் செய்யமுடியாது. அரசாங்கம் இதனை செய்யவேண்டும். பாராளுமன்றத்தினைப் பொறுத்தவரையில் நாங்கள் சொல்லமுடியும் அதனை செயற்படுத்துகின்ற நிலைமை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும், அரசாங்கத்திடமுமே தான் இருக்கின்றது.

ரணிலுக்கும் மகிந்தவுக்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது நட்பு இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆரம்பத்தில் தான் பதவியை ஏற்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரால் சில விடயங்களைச் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதுவரை நடைபெற்ற செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. ஆனால் இந்தியா யார் பிரதமராக இருந்தாலும் உதவிகளைச் செய்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு நேரடியாகவே கூறியிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கின்ற ஒரு நாட்டை, அயல் நாட்டை பட்டினியாக இருக்க முடியாது என்று சொன்னார்கள். நீங்கள் அதைச் செய்யுங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்றே நாங்களும் சொன்னோம். ஏனென்றால் நாடு முழுக்க சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற வகையில் பொறுத்திருப்போம். ஆனால் நீண்ட காலமில்லை. மக்கள் பட்டிணிச் சாவை அடைவதற்கு முன்னர் ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.

புலம்பெயர் சமூகத்தால் தற்பொது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை. விரும்புவார்கள் என்றும் நான் நம்பவில்லை. இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னரும் இன்னும் அரசு திருந்தவில்லை. இந்த குறுந்தூர் மலைப்பிரச்சினையைப் பார்த்தால் தெரியும். இப்பொழுதும் காணிகளை அளப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

சர்வகட்சி மகாநாட்டில் கூட இந்த குநற்தூர் தலைப்பிரச்சனையை ஜனாதிபதியிடம் சொன்னபோது அதனைப்பற்றித் தெரியாது என்று சொன்னார். அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. நான் பாராளுமன்றத்திலும் நீங்கள் திருந்தவில்லை என்று நேரடியாகச் சொன்னேன். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் எந்தவிதத்திலும் இதற்கு முன்வர மாட்டார்கள்.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கின்றபோது அவர்களும் இதில் பங்குதாரர்களாக இங்கே வந்து அவர்களுடைய முதலீடுகளைச் செய்வதென்றால் அதற்கு உத்தரவாதம் வேண்டும். நான் கடந்த காலங்களில் பார்ததிருக்கின்றேன் அவர்கள் இங்கு முதலீடு செய்ய வந்தால் அதிகாரிகள் புத்திமதி சொல்லியிருக்கிறார்கள் இங்கு வேண்டாம் தெற்கிலே செய்யுங்கள் என்று. அப்படியிருக்கையில் நாங்கள் கேட்கவும் முடியாது. வரவும் மாட்டார்கள்.

எங்களைப் பெறுத்தவரையில் எங்களுடைய தோழர்கள் தங்களால் இயன்றவரை சில சில உதவிகளைச் செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் செய்து கொண்டிருக்கின்றோம். தனியொரு கட்சியாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவோ செய்யமுடியாது.

21ஆவது திருத்தச்சட்டம் சரியான வரைபு வரவில்லை. எந்தவொரு வரைபும் சமர்ப்பிக்கப்படவுமில்லை. அப்படியிருக்கையில் நாங்கள் அதனைப் பார்க்காமல் ஆதரிக்கிறோம். ஆதரிக்கவில்லையென்று சொல்வது சரியுமில்லை. ஆனால் ஒன்று ஜனாதிபதியினுடைய அதிகாரம் நீக்கப்பட்டால் அதிலிருந்து வரக்கூடிய ஆளுநருக்கான அதிகாரம் நீக்கப்பட்டு, முதலமைச்சர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். முதலமைச்சர் வருகிறாரோ அன்று பார்த்துக் கொள்வோம். இப்படியான சில விடயங்களை நாங்கள் வலியுறுத்துவோம்,

ஏனென்றால், முழுமையான ஒரு அரசியலமைப்பு மாற்றம் வரப்போவதில்லை. ஆகவே அதில் போயிருந்து கொண்டு நாங்கள் சமஸ்டி அமைப்பது பற்றியெல்லாம் பேசமுடியாது. எது கிடைக்கிறதோ அதை எடுக்க வேண்டும். சரியான முறையில் எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களது அவிப்பிராயம். அதற்கான சந்தர்ப்பம் ஏற்படப்போவதில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தலாமென்று. அது கூட நடைபெறப்போவதில்லை. அரசியல் ரீதியான பிரச்சினை இறுகிக் கொண்டே செல்லும்.

கோட்டபாயவினுடைய பிழையால் நடைபெற்ற விடயங்களுக்கு நாங்கள் ஏன் தலையில் தூக்கி வைக்கவேண்டுமென் என்ற எண்ணப்பாட்டிலேயேதான் எல்லோரும் மறுத்துக்கொண்டிருந்தார்கள். அகவேதான் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று வரமுடியாமல் இருந்ததற்குக்காரணம் நாங்கள் ஒரு கூட்டமைப்பாக அதில் பங்குபற்றுவதற்குத் தயாராக இருக்கவில்லை. உண்மையாகவே நாடு முழுவதும் செய்யவேண்டும் என்ற அவிப்பிராயம் வந்தால் அது வேறு விடயம்.

எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்தும் செய்து கொண்டு போகின்றார்கள். எங்களுடைய மக்களுக்கு எதிரான விடயங்களை அவர்கள் செய்துகொண்டு போகின்றார்கள். சர்வகட்சி அரசு வந்திருந்தாலும் அதனையே செய்திருப்பார்கள் என்றார்