கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் சென்ற வேளை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.