யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயில் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
கொழும்பில் இருந்து யாழ். பயணித்த ரயிலில் நேற்று இரவு குறித்த கார் மோதியுள்ளது.
இதன்போது காரில் பயணித்த வெளிமாவட்டத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.