Home செய்திகள் நாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்!

நாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்!

118
0

நாடு முழுவதும் உள்ள மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் நாளை புதன்கிழமை ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். அதனால் நாட்டில் நாளை 48 மணித்தியாலங்களுக்கு மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், “மின்சார விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் வேண்டுமென்றே பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க விரும்பவில்லை. ஆனால், ஏதேனும் காரணங்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய, போராட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 48 மணிநேரங்களுக்கு மின்சார சபை ஊழியர்கள் எவரும் வரமாட்டார்கள்” என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.